Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இடம்பெற்ற வன்னி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த கால யுத்த சூழ்நிலைகள் காரணமாக எமது மக்களில் பலர் தங்களது சொந்தக் காணிகளைவிட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு கைவிடப்பட்ட காணிகளில் யுத்தம் முடிவுற்றதன் பின்னர், பல தரப்பினரும் வந்து குடியேறிய நிலையில், அக்காணிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணை போகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் பொதுமக்களின் காணிகளில் பல, புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டன. யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அக்காணிகள், புலிகளுடையவை எனக் கூறப்பட்டு, பாதுகாப்புத் தரப்பினரால் பயன்படுத்தப்பட்டன.
இவற்றுள் பல காணிகளை நாம் கடந்த காலங்களில் விடுவித்துள்ளோம். யாழ். பல்கலைக்கழகத்துக்குரிய கிளிநொச்சி, அறிவியல்நகர் காணி அவ்வாறு மீட்கப்பட்ட காணிகளுள் ஒன்றாகும்.
எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டினை முன்னிறுத்தியே நாம் இவ்விடயம் தொடர்பில் செயற்பட்டு வருகின்றோம்.
எனவே, தற்போதைய அரசு இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எமது மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை அபகரிக்கும் வகையிலான குடியேற்றங்கள் உருவாகுவதை எம்மால் அனுமதிக்க முடியாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago