2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காலநிலை அமைச்சரவை: ஜே.வி.பி

Thipaan   / 2016 ஏப்ரல் 07 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

மக்களுக்கு நிவாரணங்களை வழங்காது, புத்தாண்டு பரிசாக அமைச்சுப் பதவிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது எனத் தெரிவித்த ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இந்த அமைச்சரவையானது காலநிலை போன்றது. எப்பொழுது மாறும் என்றே தெரியாது என்றும் தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்கு இரண்டு தடவைகள், அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மக்கள் வழங்கிய ஆணையை மீறியே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, மஹிந்த அரசாங்கமும் இதனையே செய்தது என்றும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'மஹிந்தவின் அமைச்சரவை 100ஐத் தாண்டியது. ஆகையால், தங்களுடைய அதிகார நோக்கத்துக்காக அமைச்சரவையை அதிகரிக்கவேண்டாம்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் படி, அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆகும். அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அடங்கலாக 40யையும் கூடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்த அரசாங்கம் 19ஆவது திருத்தத்துக்குள்ளும் நுழைந்துவிட்டது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X