2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கொள்ளுப்பிட்டி மாளிகைக்கு போலி உறுதிபத்திரம்

George   / 2016 ஏப்ரல் 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி உறுதிப்பத்திரத்தை தயாரித்து கொள்ளுபிட்டி அல்விஸ் பிரதேசத்தில் 75 கோடி ரூபாய் பெறுமதியான மாளிகையின் உரிமையாளரை விரட்டியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவின் மூன்றாவது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

அதனையடுத்து, துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்றாவது சந்தேகநபருக்கு எதிராக தனியான பீ அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இடத்தின் உரிமையாளரான இலங்கையர் இறந்த பின்னர் அவரது மனைவியான இந்திய பெண் அதற்கு உரிமையாளர் இல்லை என்ற ரீதியில் போலி உரிமைப்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரகசிய பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரெருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X