2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கொஸ்கம தீ விபத்து: இதுவரை உயிர் இழப்புகளில்லை

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூன் 05 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினைத் தொடர்ந்து, இதுவரை உயிர் இழப்புகள் எவையும் பதியப்பட்டிருக்கவில்லையென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், அவிசாவளை வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்தில், அவிசாவளை வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டிகள், அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரதான வீதிக்கு அண்மையில், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .