Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் சட்டவிரோதமாக சுறா பிடிப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது
தொடர்பாக விசாரணை ஒன்றை மீன்பிடித் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
கடல் பாதுகாப்புக் குழுவான த பேர்ள் புரொக்டட்டர்ஸ் ஆனது, திருகோணமலையில்
உள்ளூர் சுறா இனங்களை மீனவர்கள் கொல்வதாக அறிக்கையிட்டிருந்தது.
இறந்த சுறாக்களின் படங்களுடன் இக்குற்றம் இடம்பெறுவதாக டுவீட் செய்திருந்த இக்குழு,
ஒரு காலத்தில் கடல் பல்வகைமை இடமாக இருந்தது தற்போது ஆபத்திலிருப்பதாகக்
குறிப்பிட்டிருந்தது.
நிலாவெளி, புறா மலை ஆகியனவே ஒரு சில, சுறாக்களுடன் நீந்தக் கூடிய இடங்களாகும்
என இக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இவ்விடயமானது மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கவனத்தில் கொண்டு வரப்பட்டதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்காக மீன்பிடித் திணைக்களத்தின் அதிகாரிகள் திருகோணமலைக்கு விஜயம் செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.
தவிர, ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்ததும், இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என விஜேசேகர தெரிவித்துள்ளார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago