Freelancer / 2026 பெப்ரவரி 26 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (26) நிறைவடைகின்றன.
பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தேவையற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சை முடிந்த கையோடு மாணவர்கள் பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறான அசம்பாவிதங்களைத் தவிர்த்து, சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதை உறுதி செய்யவே இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (a)
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago