R.Maheshwary / 2021 மே 09 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கட்டானது இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது.
கடந்த சில நாள்களாக கட்டுப்பாட்டை இழந்து விண்வௌியில் மிதந்த 30 மீற்றர் நீளமான சீன ரொக்கட்டின் சில பாகங்கள், இன்று காலை 8.50 மணியளவில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளதென, சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி, ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலின், மாலைத்தீவுக்கு வடக்கில் இது விழுந்துள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த கடல் பரப்பில் இதுவரை சுனாமி எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 தொன் நிறையுள்ள குறித்த ரொக்கட்டானது, 30 வருடங்களுக்குப் பிறகு விண்வௌியிலிருந்து பூமியில் விழுந்த மிகப்பெரிய கழிவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
3 hours ago