2021 மே 15, சனிக்கிழமை

சபைக்குள் செல்லுமாறு ரணிலுக்குப் பேரழுத்தம்

Editorial   / 2021 பெப்ரவரி 26 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரங்கள், ஜனாதிபதி ஆணைக்குழு, உடன்படிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமாயின், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றம் செல்ல வேண்டுமென, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று (25) வலியுறுத்தினர்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில், நேற்று (25) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.


இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்கள், 'உள்நாட்டில் மட்டுமல்லாது உலக பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் நன்கறிந்த, அனுபவமுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றம் செல்வதற்கு  எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலடியை இதன்போதுதான் வழங்க முடியும்' எனவும் அவர்கள் தெரிவித்தனர். 
அத்துடன்இ முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ள பாராளுமன்ற அனுபவங்கள், வேறு எவரிடமும் இல்லையெனவும் ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன இதன்போது தெரிவித்தார்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .