2025 ஜூன் 16, திங்கட்கிழமை

சைப்ரஸ், குரேஷியா, கனடாவுக்கு புறப்பட்டார் மோடி

Freelancer   / 2025 ஜூன் 16 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ பயண​மாக பிரதமர் மோடி நேற்று சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களில் அவர் 5 நாள் பயணம் மேற்​கொள்​கிறார்.

பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு முதல்​முறை​யாக பிரதமர் மோடி வெளி​நாட்டு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். டில்​லி​யில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ‘ஏர் இந்​தியா ஒன்' தனி விமானத்​தில் பிரதமர் மோடி சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். 5 நாள் பயண​மாக சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.

முதல் கட்​ட​மாக மத்​திய கிழக்கு நாடான சைப்​ரஸ் செல்​லும் பிரதமர் மோடி இன்று அந்​நாட்டு தலை​வர்​களை சந்​தித்​து, பல்​வேறு முக்​கிய அம்​சங்​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​துகிறார். பின்​னர், பிரதமர் மோடி கனடா செல்​கிறார். கனடா​வில் ஜி7 நாடு​களின் வரு​டாந்​திர உச்சி மாநாடு 17, 18 ஆம் திகதி​களில் நடை​பெறுகிறது. அந்த மாநாட்​டில் பங்​கேற்​கு​மாறு கனடா பிரதமர் மார்க் கார்னி விடுத்த அழைப்பை ஏற்று மோடி அங்கு செல்​கிறார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .