2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சபாநாயகர்- கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (02),இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கமைய, சபாநாயகர் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று அழைத்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கிடையில் இடம்​பெற்ற சந்திப்பு தொடர்பிலும், கட்சிப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .