2021 மே 14, வெள்ளிக்கிழமை

செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருள் மீட்பு

Niroshini   / 2021 மார்ச் 08 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ், எம்.றொசாந்த்

நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில், இன்று (08) அதிகாலை இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு,   சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 குறித்த இந்து மயானத்தில், இன்று அதிகாலை, பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக, இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளதுடன், குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .