2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சமஷ்டிக்கான மக்கள் ஆணை இன்னும் இல்லை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் சமஷ்டி முறையிலான ஆட்சியை நடத்துவதற்கு, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையொன்றும் கிடைக்கப்பெறவில்லை ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் வண. ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் சமஷ்டி ஆட்சியொன்றைக் கொண்டுவருவதற்கான சந்தர்ப்பமொன்று கிட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனினால் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கே, தேரர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

'கிடைக்கப்பெற்றுள்ள பொன்னான வாய்ப்பை, தமது மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தாமல், மீண்டும் பிரச்சினையொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்' என்றும் தேரர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளின் இவ்வாறான நடவடிக்கைகள், அரசியலில் அவர்கள் நிலைத்திருப்பதற்காகவே அன்றி, மக்கள் சேவைக்காக அல்ல' என்றும் ஒமல்பே சோபித்த தேரர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X