2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சம்பள விவகாரம்: ’சர்வதேசப் பிரச்சினையாக மாறும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

கூட்டு ஒப்பந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இல்லையேல் தேசியப் பிரச்சினையாக உள்ள இவ்விவகாரம், சர்வதேசப் பிரச்சினையாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதெனவும் எச்சரித்தார்.

நுவரெலியாவில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கூறிய அவர், “நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால், பாதீட்டில், எமது வாக்குகளை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதையும் தீர்மானிக்க வேண்டிய ஒரு நிலையிலுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

எனவே, அரசங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவு தொடருமா அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா என்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்ததுடன், அரசாங்கம் இந்தத் தருணத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நல்ல பதிலைக் கொடுப்பதுடன், கம்பனிகளுக்கும் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .