2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிறந்த உணவு பட்டியலில் இலங்கைக்கு 69வது இடம்

Editorial   / 2025 ஜூலை 03 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகில் சிறந்த உணவு, சிறந்த உணவு கொண்ட நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை, தனியார் பயண வழிகாட்டி நிறுவனமான ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்டுள்ளது.

100 நாடுகள் உள்ளடங்கிய இந்த பட்டியலில், 4.6 புள்ளிகளுடன் கிரீஸ் முதலிடத்தில் உள்ளது. இலங்கைக்கு 69வது இடத்தில் உள்ளது.

 இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. துருக்கி, இந்தோனீசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் 6 முதல் 10 வரையிலான இடத்தை பிடித்துள்ளது. 

போலந்து 11வது இடத்தையும், 4.42 புள்ளிகளுடன் இந்தியா 12வது இடத்தையும், அமெரிக்கா 13வது இடத்தையும், இலங்கை 69வது இடத்தையும் பிடித்துள்ளது.  

இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான் (naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் கோழி, தந்தூரி கோழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

உலகளவில் சிறந்த உணவுகளில், கொலம்பியாவின் Lechona என்ற பன்றி இறைச்சி உணவு முதலிடத்தையும், இத்தாலியின் Pizza Napoletana 2வது இடத்தையும் பிடித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .