Freelancer / 2025 நவம்பர் 04 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் திடீர் தீப் பரவல் ஏற்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் வாகனம் மன்னார் வீதியில் பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார சீரின்மை காரணமாக தீப் பரவல் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச் சம்பவத்தின் போது வாகனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago