2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சாமரவின் விளக்கமறியல் நீடிப்பு

Simrith   / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சாமர சம்பத் தசநாயக்க மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கடந்த மார்ச் 27 ஆம் திகதி, இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் சுமத்தப்பட்ட 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஒரு குற்றச்சாட்டிற்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X