2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சாமர சம்பத் பிணையில் விடுதலை

Simrith   / 2025 ஏப்ரல் 08 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.73 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

 ஊவா மாகாண சபையின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்த ஆறு நிலையான வங்கிக் கணக்குகளை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்பட்டுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டது.   

சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும்,  , 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட பிரதம நீதவான், பிணை எடுப்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். .

, சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், பிணை வழங்கிய பிரதான நீதவான், சந்தேக நபரை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் அதிகாரசபைக்கும் அறிவுறுத்தினார்.

சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பதுளை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்னும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றும் அடுத்த இரண்டு நாட்களும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள உத்தரவிடுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த பிரதான நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை ஜூன் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X