2025 மே 14, புதன்கிழமை

சாராயத்தவறணைக்கு எதிராக விளக்குமாறு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2025 ஜனவரி 21 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி. சகாதேவராஜா

கல்முனை பெரிய நீலாவணையில் மற்றுமொரு சாராய தவறணை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குமாறுடன்  கல்முனையில் செவ்வாய்க்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் பெரிய நீலாவணை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குமாறு மற்றும் பதாகைகளுடன் காணப்பட்டார்கள் .

கடந்த பத்தாம் மாதம் இரண்டாவது தவறணை திறக்கப்பட்டதும் ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது அதை மூடினார்கள். ஆனால், இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.

 எங்களுக்கு இந்த சாராய தவறனை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஒரு மகஜர் பிரதேச செயலாளரிடம் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .