R.Maheshwary / 2021 மார்ச் 30 , மு.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்- 19 நோய் பரவலுக்கு மத்தியில், இம்முறை சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில், அடுத்த வாரம் தீர்மானிக்கப்படுமென, கொவிட்- 19 நோய்தொற்றொழிப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் கொவிட்- 19 நோய்த் தொற்றுப் பரவலின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டே, இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் அதனையொட்டி நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை, கொவிட்- 19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நடத்த முடியுமா என்று ஆராய்ந்து அறிவிக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம், கொவிட்-19 நோய்த் தொற்றொழிப்பு தேசிய செயற்பாட்டு மையம் கோரியுள்ளது என்றும் அதன்படி, இந்தக் கோரிக்கை தொடர்பில் ஆராயுமாறு, தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago