2025 ஜூலை 16, புதன்கிழமை

சிறுமி வன்புணர்வு: லியனகே விடுதலை

Freelancer   / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு சிறுமியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலை விடுவித்து விடுதலை செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட  கடூழிய சிறைத்தண்டனையை மீளாய்வு செய்து இரத்து செய்யுமாறு கோரி, குறித்த மேன்முறையீட்டை சுனில் தாக்கல் செய்திருந்தார்.

மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சாட்சிய விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி, மனுதாரர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியமையை திட்டவட்டமாக மறுத்ததால் தனக்கெதிரான தண்டனையை நீடிக்க முடியாது என்று மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த மனு மீதான தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி.குமாரத்தினம் மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.

அதன்போது, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சியங்களை விசாரணை நீதிபதி, மதிப்பீடு செய்யத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்பை இரத்துச் செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.
 
2012ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதிக்கும் 2012ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாருவ லியனகே சுனில் குற்றச்செயலை புரிந்துள்ளதாக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட சாட்சிய விசாரணைக்கு அமைய குற்றவாளியாக இனங்காணப்பட்ட சுனிலுக்கு 15 வருட கடுழிய சிறைதண்டனை மற்றும் இரண்டரரை இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X