Editorial / 2025 ஏப்ரல் 08 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (௦8) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையில் விணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூ.1.5 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவரது விளக்கமறியல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, செவ்வாய்க்கிழமை (08) மாலை வரையிலும் தவறியமையால், அவர், சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago