2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலையில் சின்னம்மை: இரு வாரங்களுக்கு முடக்கம்

Editorial   / 2023 ஜூலை 31 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் வவுனியா சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை  கடந்தவாரம் கண்டறியப்பட்டது. 

 இதேவேளை, சின்னம்மை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில வழக்குகள் நிகழ்நிலை தொழில்நுட்ப உதவியுடன் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை வவுனியா சிறைச்சாலையில் இடவசதி பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளதுடன் அளவுக்கதிகமான கைதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X