Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளரான விமல் பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, 2002ஆம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் இன்றைய தினம் விதிக்கப்பட்டது.
எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாக விமல் பெரேரா சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
இதனையத்து, விமல் பெரேராவை 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
14 minute ago
56 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
56 minute ago
56 minute ago
2 hours ago