Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (வயது 34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2-ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனைக்கான முதல் இரவை அவர் சிறையில் கழித்தார். கண்ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறை மருத்துவர்கள் அன்று இரவு அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, தனது வேதனைகளை மருத்துவர்களிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பி. என்பதால் தற்போது அவர் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago