2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

‘சி.வி.யின் தீர்மானம் அரசமைப்புக்கு முரணானது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணாகவுள்ளதென, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, டெனீஸ்வரனுக்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட நியமனமும் சட்டவிரோதமானதென தெரிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X