2025 மே 01, வியாழக்கிழமை

சீனியின் ருசியைக் கண்ட முகாமையாளர் சிக்கினார்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ, கொஸ்கஸ்சந்தி சதொச கிளையில் 37 மெற்றிக் தொன் சீனியையை திருடினார் என்ற குற்றச்சாட்டில் அக்கிளையில் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சதொசவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில், புத்தளம் மாவட்ட வலய முகாமையாளர் மற்றும் வெலிசர களஞ்சியசாலையின் பராமரிப்பாளர் ஆகியோர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

வென்னப்புவ கொஸ்கஸ்சந்தி சதொச கிளை, வழக்கமாக மாதத்துக்கு 4 மெற்றிக் தொன் சீனியை விற்பனை செய்கிறது.

கடந்த திங்கட்கிழமை வழமைக்குமாறாக அதிகளவான சீனியை குறித்த முகாமையாளர் வெலிசர களஞ்சியத்தில் கோரியுள்ளார். 

கோரப்பட்ட அதிகளவான சீனியைக் ஏற்றிக்கொண்டு சென்ற லொறியில் இருந்த மொத்த சீனியும் மூன்றாம் தரப்பு லொறியில் ஏற்றப்பட்டுள்ளது. 

அந்த மாற்றப்பட்ட லொறி சதொச கிளைக்கு சீனியைக் கொண்டு செல்லாது, வேறொரு கடைக்கு கொண்டு சென்றுள்ளது.

இதுதொடர்பில் ​​சதொச சிறப்பு புலனாய்வுப் பிரிவு, வென்னப்புவ பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதகவும் அந்த அதிகாரி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .