Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூன் 23 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீதுவ பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றில் வண்ணம் பூசப்பட்ட சிவப்பு சீனியை விற்பனை செய்ததற்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நான்கு இலட்சம் ரூபாய் (400,000) அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சீதுவ பகுதியில் பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில், சந்தையில் விற்கப்படவிருந்த சிவப்பு சீனியில் நிறம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட ஆய்வின் போது சீதுவ பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியது.
மாதிரிகள், இலங்கை தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்பதை ஆய்வக அறிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர், 2023ஆம் ஆண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி சிவப்பு சீனியை விற்பனை செய்தல் மற்றும் வழங்குதல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, கடந்த 19ஆம் திகதி இரண்டு குற்றங்களுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், மேற்படி பல்பொருள் அங்காடிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததற்காக, தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய பகுதிகளில் உள்ள மூன்று பல்பொருள் அங்காடிகளுக்கு, கடந்த 18 ஆம் திகதி அளுத்கடே நீதவான் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
05 Sep 2025
05 Sep 2025
05 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Sep 2025
05 Sep 2025
05 Sep 2025