2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சீருடை வவுச்சர்கள்: கால எல்லை நீடிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே, அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை விடுமுறைக் காலம் நிறைவடையும் முன்னர், வவுச்சர்களை  பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் கால எல்லை எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .