2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுகாதார துறையினர் இன்றும் பணி பகிஷ்கரிப்பு

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் நேற்று (02) ஈடுபட்டிருந்த 17 சுகாதார தொழிற்சங்கங்கள், தங்களுடைய பணிப்பகிஷ்கரிப்பை இன்றும் (03) முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.   

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததை கண்டித்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று (02) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினால், நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர். 
 
எவ்வாறாயினும், சிறுவர் , புற்றுநோய்  , மகப்பேற்று ஆகிய வைத்தியசாலைகள், தேசிய இரத்த வங்கி மற்றும் கொழும்பு தேசிய தொற்றுநோய்கள் நிறுவகம் ஆகியவற்றின் இந்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (02) முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள  சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ், மேலே குறிப்பிட்ட வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில், இன்றும் (03) முன்னெடுக்கப்படாது என அறிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .