R.Maheshwary / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
வழமைப் போல் சுகாதாரப் பாதுகாப்பற்ற விதத்தில் பொதுமக்கள் செயற்பட்டால், அடுத்த கொரோனா அலை ஏற்படுவதைத் தடுக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (6)நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பின்போது தொடர்ந்துரைத்த அவர், புத்தாண்டுக் காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவற்றை பொதுமக்கள் கடைபிடிப்பது அவசியம் என்றார்.
இது குறித்து பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதாரப் பிரிவினருக்குதம் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளதுடன், அவர்கள் அவர்களது கடமையைச் செய்வது போல், பொதுமக்களும் உரிய கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது அவசியம் என்றார்.
புத்தாண்டுக் காலத்தில், முதலாவது தொற்றாளர் இரண்டாவது தொற்றாளரை அடையாளம் காண்பது கடினம் என்பதாலேயே, சுகாதார அமைச்சு வழிகாட்டல் ஒன்றை வழங்கியுள்ளது. எனவே, கொரோனா தொற்றுடன் புத்தாண்டைக் கட்டுப்பாட்டுடன் கொண்டாடுமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago