2025 ஜூலை 03, வியாழக்கிழமை

’சுமூகமான முறையில் சாதாரணதர பரீட்சை ஆரம்பம்’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை இன்று சுமூகமான நிலையில் ஆரம்பமானதாக  பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரீட்சை தொடர்பு நிலையங்கள் 547 ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை ஆரம்பமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என,  மொத்தமாக, 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் இம்முறை பரீட்சை எழுத தகுதிப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை இன்று (02) வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .