2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

செம்மணியில் சிசுவின் எலும்பு கூட்டு தொகுதி - அகழ்வு பணிகள் நிறுத்தம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. 

செம்மணியில் இதுவரை கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப்பணிகளில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அதேவேளை, கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X