2025 மே 19, திங்கட்கிழமை

சி.ஐ.டி முகமூடி அணிந்து பண மோசடி: சிறை காவலர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு அதிகாரி (சி.ஐ.டி) என்று கூறி பணம் மோசடி செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சிறை காவலர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கிரில்லவல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவராவார். அவர், அலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர், இன்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான ஆவணங்கள் போலியானது என்றும் அதுதொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணையை கைவிடவேண்டுமாயின் 25 ஆயிரம் ரூபாவை தனியார் வங்கியொன்றில் வைப்பிடவேண்டும் என்றும் அந்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைபாட்டின் அடிப்படையில், அலைபேசி அழைப்பை வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X