2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிசுவின் உயிரைக் குடித்த சார்ஜர்

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த அலைபேசி சார்ஜரின் வயரை வாயில் தவறுதலாக வைத்தமையால், ஏழு மாத சிசு, பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று திவுலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. 

மின்வழங்கியோடு இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருக்கும் வயரை எடுத்த, அந்த பெண் சிசு, அதனை வாயில், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் வைத்தமையால் அச்சிசுவின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

மின்சாரம் தாக்கப்பட்ட நிலையில், அச்சிசு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும், அச்சிசுவை காப்பற்ற முடியவில்லை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X