2025 மே 22, வியாழக்கிழமை

சின்ன சக்வித்தியின் குழு ஆயுதங்களுடன் கைது

Thipaan   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு மாகாணங்களிலும் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்களிடம் பணம் மற்றும் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கோஷ்டியைச் சேர்ந்த மூவர், ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா, குற்றவிசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியாவில் அதுமட்டுமன்றி அவர்களிடமிருந்து 25ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், இராணுவத்தின் பொறியியல் பிரிவிலிருந்து தப்பியோடிவர்கள் என்றும் அக்குழுவின் தலைவர், கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த சின்ன சக்வித்தி என்றழைக்கப்படுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர் கடத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவே தாங்கள் வந்ததாக தெரிவித்தனர் என்றும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X