2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சீனா பயணமாகியது சபாநாயகர் தலைமையிலான குழு

Thipaan   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவுக்கு, நேற்றுப் பயணமாகியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்கட்சியின் பிரதம கொரடாவுமான அநுர குமார திஸாநாயக்க, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .