2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சீனாவின் உதவியுடன் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன உதவியுடனான உட்கட்டமைப்புத் திட்டங்களை, இலங்கையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதனுள் கொழும்பு துறைமுக நகரத்திட்டமும் உள்ளடங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'சீன உதவியுடமான கொழும்பு துறைமுகத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இது முதலாவது திட்டமாகும். அடுத்ததாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

'ஆசியாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனாதான். அந்த நாடு, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் உதவுவதற்கு தயாராக உள்ளது' என்றும்  அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X