Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 24 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுடன் அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சீபா) கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், சர்வதேச ரீதியில் இந்தியர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடியானது, இலங்கையில் மேலும் அதிகரிக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்பாட்டில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் இந்திய வைத்தியர்கள் என்றும் அவர்கள் இலங்கைக்கு அதனை கற்பித்துக்கொடுத்துள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மோசடி செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றையோர், இலங்கை அரசாங்க வைத்தியர்கள் இல்லை என்றும் எனினும் இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் அந்த முன்னணி தெரிவித்துள்ளது.
ரொய்ட்டரினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையிலேயே இவையனைத்தும் குறிப்பிடப்பட்டள்ளதாகக தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளர் சட்ட வழக்கறிஞர் கபில கமகே தெரிவித்தார். இலங்கையிலுள்ள சுகாதாரத்துறை உட்பட ஒவ்வொரு துறைக்கும் ஆபத்தான நிலைய ஏற்படவுள்ளதாகவும் இந்தியா, ஏற்கெனவே இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடியின் மூலம் அதனை நிரூபித்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மோசடிக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திலுள்ள வைத்தியர்களுக்கும் தொடர்பு உண்டு என்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மீது, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சேறுபூச முயல்கின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .