Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படவுள்ள சுயாதீன ஆணைகுழுக்களுக்காக சுமார் 250 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தற்போது முன்மொழியப்பட்டுள்ளன.
நாடாளுமன்றில், செவ்வாய்க்கிழமை(22) நடைபெற்ற கூட்டத்தில், 10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான சுமார் 250 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அரசியலமைப்புச் சபைக்கான மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கும் நாடாளுமன்ற அங்கிகரித்தது.
இதனை தொடர்ந்து, அரசியலமைப்பு பேரவை சபையின் தலைவர், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று புதன்கிழமை கூடியது.
இதன்போது,அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததின் பிரகாரம் ஸ்தாபிக்கப்படவுள்ள சுயாதீனக் குழுக்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து சிவில் பிரதிநிதிகள் துரிதகதியில் ஈடுபட வேண்டும் என்றும் அரசியலமைப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதற்கிணங்க,தேர்தல்கள் ஆணைக்குழு,பொது சேவை ஆணைக்குழு,பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, வரம்பு படுத்தல் ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஆகிய 10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமான உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, உறுப்பினர்களுக்கான நியமனப்பத்திரங்களைக் கோரும் திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago