2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த முத்தரப்புக் கூட்டுறவு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக நோயை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு முத்தரப்புக் கூட்டுறவை ஏற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கியூபா மற்றும் எல்சல்வடோர் வைத்திய  நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இக்கலாந்துரையாடல் இன்று (29) முற்பகல் கொழும்பு மஹகமசேகர மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கையில் தற்போது நிலவும் சிறுநீரக பிரச்சினைக்கு மிதமிஞ்சிய இரசாயன உரப்பாவனையே காரணம் என ஜனாதிபதி, இதன்போது தெரிவித்தார். பொலன்னறுவையிலுள்ள தனது நெற்காணிகளுக்கு கூட்டு உரங்களை மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, விவசாயிகள் கூட்டுரங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கியூபா தூதுவர் புலரன்டினோ பெடிஸ்டா கியுபா நாட்டில் சிறுநீரக நோய் பெறுமளவு பரவாமைக்குக் காரணம் தமது நாடு இரசாயண உரப்பாவனையைப் பயன்படுத்தாமையேயாகும் எனக் குறிப்பட்டார். சிறுநீரக நோய் ஒழிப்பு தொடர்பில் தேவையான நிபுணத்துவத்தையும் தொழிநுட்ப உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

எல்சல்வடோர் நாட்டின் சலூட் தேசிய நிறுவனத்தின் தலைவர் டாக்டர் காலோ மெனுவெல் நவாரோ இலங்கையிலும் தமது நாட்டிலும் விவசாயத்துறை சார்ந்த சிறுநீரகத்துடன் தொடர்புடைய நோய்களில் பல்வேறு ஒத்த குன இயல்புகள் உள்ளதாக தெரிவித்தார். எனவே, இத்துறையிலான கூட்டுறவு இருநாடுகளுக்கும் பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் கியூபா தூதுவர் புலரன்டினோ பெடிஸ்டா உள்ளிட்ட நிபுணர்களும் எல்சல்வடோர் நாட்டின் பிரதிநிதிகள் சிறுநீரக நோய் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் கருத்திட்டப் பணிப்பாளர் அசேல இத்தவெல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X