2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுநீர மோசடி விவகாரம்: மூவரடங்கிய குழு நியமனம்

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக மோசடி விவகாரத்துடன் தொடர்டைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ஒருவாரத்துக்குள் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் தனிநபர் சேவைக்கான பணிப்பாளர் காந்தி ஆரியரத்ண, மேல்மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் தீப்தி பெரேரா மற்றும் மற்றுமாரு சிரேஷ்ட அதிகாரி ஆகிய மூவருமே இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இம்மூவரும் சிறுநீரகம் மாற்று சிகிச்சைகளை செய்த ஆறு வைத்தியர்கள் பணியாற்றி வைத்தியசாலைக்கு விஜயம் செய்வர் என்றும் அந்த ஆறு வைத்தியர்களுக்கும் இந்த மோசடிக்கும் இடையிலான சம்பந்தம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவிக்கும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளும் சுகாதார அமைச்சிடம் அனுமதி பெற்ற பின்னரே மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த நடைமுறையை அனைத்து உறுப்பினர்களும் பின்பற்றுவதாகவும் தனியார் வைத்தியசாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

'உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளர்களுக்கு, சங்க உறுப்பினர்கள் பல்வேறு சிகிச்சைகளை செய்கின்றனர். இதனுள், உடலுறுப்பு மாற்று சிகிச்சையும் உள்ளடங்குகின்றது. இலங்கையில், உடலுறுப்பு  மாற்று சிகிச்சையானது, 1987ஆம் ஆண்டின் மனித திசு சட்டத்தின் கீழ் வருகின்றது. அனைத்து வைத்தியசாலைகளும் கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே செயற்பட்டு வருகின்றன. இதனால், சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்ட சிகிச்சைகளையே வைத்தியசாலையிலும் செய்யப்படுகின்றது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X