2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுமியின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட வேண்டாம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) அறிவித்துள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் உடைகள் கலைந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் நடந்த வேளை, வீட்டில் சிறுமியின் பெற்றோர், சகோதரன், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் இருந்த நிலையில் வீட்டின் ஜன்னலின் ஊடாக சிறுமி கடத்திச்செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார், சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரேதபரிசோதனைகளிலிருந்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த குறித்த சிறுமியின் 5ஆவது பிறந்த தினம், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X