Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தியை, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன், நேற்று புதன்கிழமை மறுத்துள்ளார்.
அந்த விளக்க அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைத்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் ரூபாயை நாடாளுமன்றத்தில் கோரியிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிகவும் பழமையான இரண்டு வீடுகளை ஒன்றாக இணைத்து, ஜனாதிபதியின் பாவனைக்கு உகந்த வகையில் இந்த புதிய உத்தியோகபூர்வ வாசஸ்தலம் புனரமைக்கப்படவிருக்கின்றது.
அதற்கு மேலதிகமாக, வாசஸ்தலத்தின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருப்பதற்கான வசதிகள், வாகனம் திருத்தும் இடத்தை புனரமைத்தல் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.
இந்த சகல புனரமைப்பு நடவடிக்கைகளும் அரச நிறுவனமான மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக செய்தியின் பிரகாரம், பீ.எம்.டபிள்யூ மோட்டார் கார் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கான பீ.எம். டபிள்யூ மோட்டார் சைக்கிள் கொள்வனவு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையாவும் கடந்த அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை, துறைமுகத்தில் இன்னும் வைத்திருந்தால் மேலதிக கட்டணங்களை செலுத்தவேண்டும். அத்துடன் அவற்றை மீளவும் ஏற்றுமதி செய்யமுடியாது என்பதனால், அவற்றை அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago
18 May 2025