2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சாலாவ புகையை சுவாசிக்க வேண்டாம்: சுகாதார அமைச்சு

Kanagaraj   / 2016 ஜூன் 06 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலாவ இராணுவம் முகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து கிளம்பிய புகையை சுவாசிப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயமுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த பகுதியில் புகைமூட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது. குறித்த பகுதியில் காணப்படும் புகையை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும் என சூழல் நலன்கள் , உடல்நலன் மற்றும் உணவு பராமரிப்பு தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .