2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஜோதிட நிலையம் சுற்றிவளைப்பு: இந்தியர்கள் மூவர் கைது

Freelancer   / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள் நடத்திய சட்டவிரோத ஜோதிட நிலையம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று சுற்றி வளைக்கப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை தும்பளை வீதியில் இந்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது.

இந் நிலையத்தினை இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த மூவரே நடாத்தி வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவர் பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து மேற்படி  இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனாலும்,  தொடர்ந்தும் ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்தியப் பிரஜைகளன் கடவுச் சீட்டை பரிசோதனை செய்த போது , அவர்கள்  மூவரும் சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் வந்துள்ளமை தெரியவத்தது.

இதனையடுத்து மூன்று இந்தியப் பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X