2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கு சஜித் பதில் கடிதம்

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் ஆணைக்கு முரணாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரையும் பிரேரிப்பதில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் (12) அனுப்பியிருந்த கடித்திற்கு பதில் வழங்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராக மக்களுக்கு பணியாற்ற அர்ப்பணிப்பு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள  விருப்பமில்லையென்று கூறவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களின் இறையாண்மை மீது மேற்கொள்ளப்படும் தாக்குல் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .