Freelancer / 2025 பெப்ரவரி 04 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம். இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.
கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம்.
எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (a)
44 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
58 minute ago