Freelancer / 2026 மார்ச் 13 , பி.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம்களின் ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் இப்தார் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகமும் ஜனாதிபதி செயலக நலன்புரி சங்கமும் இணைந்து இந்த இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்தன.
ரமழான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து எம்.எஃப்.ஏ. நுஃபைல் மௌலவி சிறப்புரை ஆற்றினார்.
அல் ஹாபிழ் ஏ.என். உபைதுல்லாஹ்வின் சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 க்கு இப்தார் நிகழ்வு தொடங்கியதுடன், அதைத் தொடர்ந்து இரவு உணவும் பரிமாறப்பட்டன.
மேலும், இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட முஸ்லிம்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
ஜனாதிபதி செயலகம் இந்நாட்டின் அரச துறையில் முக்கிய இடமாகும் என்றும், இப்தார் நிகழ்வை முன்னிட்டு முழு முஸ்லிம் சமூகத்திற்கும் ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.
பல்லின மக்கள் வாழும் நாடாக, நாம் ஒருவருக்கொருவர் கலாசாரங்களை மதித்து ஒருங்கிணைந்து செயற்படுகிறோம் என்றும், ரமழான் கொண்டாட்டத்தை இலங்கை மக்களின் தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் தனித்துவமான கொண்டாட்டமாக விவரிக்கலாம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான பிரசன்ன சந்தித், ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் உதவி செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலக நலன்புரி சங்கத்தின் செயலாளர் சமித் தலகிரியவ, ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர்கள், பணிப்பாளர்கள் , பிரிவுத் தலைவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago