2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Editorial   / 2020 மே 23 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில், இன்று (23) சுமுகமான தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும், கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். 

தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி நன்றி  தெரிவித்துள்ளார். 

இந்தியா அன்பளிப்பு செய்த 10 டொன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் ஜனாதிபதி; குறிப்பிட்டுள்ளார்.

'தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தான் புரிந்து வைத்திருப்பதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .