Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒஸ்ட்ரியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை மீண்டும் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டும் பிரியானி விஜேசேகர இன்னும் நாடு திரும்பவில்லையெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஒஸ்ட்ரியாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்கு பலமுறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நிலையில், ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு குறித்த அலுவலகத்தில் யாரும் பதிலளிக்கவில்லை.
இதனையடுத்து, ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஒஸ்ட்ரியாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதுவராலம் ஊடாகவே பொஸ்னியா, சேர்பியா, ஸ்லோவாக்கியா ஆகிய பல நாடுகளுடனான தொடர்புகள் முன்னெடுக்கப்படுவதால், முக்கியமான பணிகளை முன்னெடுக்கும் தூதுவராலயத்தில் பல மணி நேரமாக தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளிக்க யாரும் இல்லையென்பது பிரச்சினைக்குரிய விடயமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை தற்போது வெளிநாட்டமைச்சில் பணிபுரியும் பல அதிகாரிகள் போலாந்து, சுவீடன், கனடா மற்றும் வொஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களின் பதவிகளுக்காக நியமிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago